
இதுதொடர்பாக முரசொலியில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதாலோ, மாமல்லபுரத்தில் நரேந்திர மோடி வேட்டி கட்டி நிற்பதாலோ, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பேசுவதாலோ, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் வரலாறு, தொன்மை, பண்பாடு, எண்ணவோட்டம் ஆகியவற்றை புரிந்துகொள்ளாமல், வெளிவேடங்கள் போடுவதால் பாஜகவுக்கு எந்த பயனும் கிடைக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி விட்டால், தமிழக மக்கள் தாமரைக்கு ஓட்டு போட்டு விடுவார்களா என்றும் அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறள் நெறிகளைப் பின்பற்றுவதால் மக்கள் மனங்களை வெல்ல முடியுமே தவிர, வள்ளுவருக்கு வேட்டி மாற்றி விடுவதால் அல்ல என்று முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments