
என்.சி.பி மூத்த தலைவர் நவாப் மாலிக் இன்று கூறுகையல் "சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான பிளவு முதல்வர் பதவிக்கு மேல் இருந்தது. எனவே நாங்கள் முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை. முதல்வர் சிவசேனாவிலிருந்து வருவார்" என்று கூறினார்.
இதனிடையே சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பாரா அல்லது கட்சியில் வேறொருவரை இந்த பதவிக்கு பரிந்துரைப்பாரா என்பது குறித்து சிவசேனா இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஒருவேளை உத்தவ் தாக்கரே முதல்வராக விரும்பாவிட்டால் சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Comments