படமாகும் பப்ஜி கேம்.. மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

பாதிப்புசென்னை: பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள பப்ஜி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற டைட்டிலை பப்ஜி என சுருக்கி பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர். தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், பப்ஜி மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ஸ்மார்ட் போன்களில் விளையாடப்படும் ஆண்ட்ராய்ட் வீடியோ கேமான பப்ஜி, உலகளவில் பிரபலமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பப்ஜியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பப்ஜி விளையாடுவதால், குழந்தைகளுக்கு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் பப்ஜியால் உயிரிழப்பும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பப்ஜி டைட்டிலில் ஒரு படத்தை தமிழில் உருவாக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நபர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவதால், அவர்களுக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வர ஆரம்பிக்கின்றன. தமிழ் பிக்பாஸில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் சினிமாவில் தலை காட்ட தொடங்கியுள்ளனர். பிக்பாஸ் இரண்டாம் சீசனில் பங்குபெற்று சர்வாதிகாரியாக வலம் வந்த ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் இந்த பப்ஜி படம் உருவாகியுள்ளது.

பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற தலைப்பில் உருவாகியுள்ள பப்ஜி படத்தின் மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த படத்தை தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். மேலும், அர்ஜுமன், அனிதா நாயர், பிக்பாஸ் ஜூலி, மொட்டை ராஜேந்திரன், சாந்தினி, ரித்திகா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Comments