மேளதாளத்துடன் ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் வரவேற்பு கொடுத்த சிவசேனா.. விழாவிற்காக புத்தம் புதிய லுக்! - வீடியோ இணைப்பு

மாநில தலைவர்கள் பலர் இதற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி வைத்து இருக்கும் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவையும் சிவசேனா கட்சி விழாவிற்கு அழைத்துள்ளது. ஆனால் இவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் இன்று காலை மும்பை சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் மும்பை சென்றார்.
#WATCH Maharashtra: DMK president MK Stalin arrives in Mumbai. He will attend the swearing-in ceremony of the new government of the state, led by Shiv Sena chief and 'Maha Vikas Aghadi' Uddhav Thackeray as the Chief Minister, today. #Maharashtra pic.twitter.com/jafvkBryiP— ANI (@ANI) November 28, 2019
மும்பை சென்ற ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியினர் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மேளதாளத்துடன் ஸ்டாலினை சிவசேனாவினர் வரவேற்றனர். சிவசேனா - திமுக இடையில் பெரிய அளவில் உறவு எதுவும் இருந்தது கிடையாது. தற்போது பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் இரண்டு கட்சிகளும் இணைந்துள்ளது.
அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் வித்தியாசமான கெட்டப்பில் அங்கு சென்று இருந்தார். கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்தபடி அவர் அங்கு சென்றார். தன்னுடைய அப்பாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அணிந்து இருந்தது போன்ற கண்ணாடி ஆகும் இது. இதே கண்ணாடியை லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஸ்டாலின் சமயங்களில் அணிந்து இருந்தார். தற்போது மீண்டும் அதை அணிய தொடங்கி உள்ளார்.
Comments