
இது எப்போது, எப்படி நடந்தது என்பது பிடிபடாத நிலையில், இந்த அரசியல் நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இதற்கான கருத்துக்கள், கண்டனங்கள், வரவேற்புகள், சர்ச்சைகள் கிளம்ப தொடங்கிவிட்டன.
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஆதரவு அளப்பது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, இதற்கும் தேசிய காங்கிசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சரத்பவார் விளக்கம் அளித்த நிலையிலும், அவரது செயல்பாடுகள் மற்றும் தனித்து விடப்பட்டுள்ள கட்சியின் நிலை குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
சிவசேனா கட்சியின் மூத்ததலைவர் சஞ்சய் ராவத், அஜித்பவார் மகாராஷ்டிர மாநில மக்களின் முதுகில் குத்திவிட்டார், சரத்பாவருக்கு துரோகம் செய்துவிட்டார் என விமர்சித்துள்ளார். இவரது ஆதங்கமும், கோபமும் அவர் பதிவிட்ட "பாவங்களின் ஒட்டுமொத்த ஏஜென்டுகள்" என்ற ஒத்தை வரிகளியே வெளிப்பட்டுள்ளது.
அதேபோல, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மிலிந்த தியோரா ஒரு ட்வீட் போட்டு இந்த அரசியல் நிகழ்வை விமர்சித்துள்ளார். "தி காட்பாதர்" சினிமா பட டயலாக்கை தன் ட்விட்டரில் பதிவிட்டு, அந்த பட போட்டோவையும் போட்டுள்ளார். "Keep your friends close, but your enemies closer ~ @godfathermovie" என்றிருக்கிறது அந்த ட்வீட், அதாவது "நண்பர்களை பக்கத்தில் வைத்துக் கொள், ஆனால், எதிரிகளும் கூடவே இருக்காங்க" என்கிறது அதன் அர்த்தம்!
இப்படி பலவாறாக விமர்சனங்கள் எழுந்தாலும், பாஜகவின் இந்த அதிரடியை, வியூகத்தை வரவேற்றும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இதனை முதலில் வரவேற்றது பிரதமர் மோடிதான். மகாராஷ்டிராவின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்ற தேவி பட்னாவிஸ்ஜி மற்றும் அஜித் பவர்ஸ்பீக்ஸ்ஜி ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள், என்று ட்வீட் போட்டுள்ளார். அதேபோல, இப்படி ஒரு மகிழ்ச்சியைதான் அமித்ஷாவும் வெளிப்படுத்தி உள்ளார்.
Comments