
இந்த நிலையில் தற்போது பிரக்யா தாக்கூர் மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். மொத்தம் 21 பேர் கொண்ட மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழு இன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருப்பார்.
இந்த குழுவில் எதிர்கட்சியை முக்கிய தலைவர்களாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் எம்பி பரூக் அப்துல்லா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர் இடம்பெற்றுள்ளார்.
இந்த குழு இந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை ஏற்படும் போது தேசிய பாதுகாப்பு அமைப்பு இவர்களிடம் ஆலோசனை செய்யும். இவர்கள் முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு துறையில் அடிக்கடி வழங்குவார்கள்.
இந்த நியமனம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குண்டு வெடிப்பு வழக்கில் சிறை சென்று, புகாரில் சிக்கி இருப்பவரை எப்படி பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் நியமிக்கலாம். பாதுகாப்பிற்கு எதிரான ஒரு நபரை எப்படி பாஜக கட்சி பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் நியமிக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Comments