
இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் எல்லோரும் இதை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும் ரஜினியின் கருத்தை எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான். திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் இருக்கிறது. நல்ல தலைவர்கள் யாரும் இல்லை.
ரஜினி சொன்னது உண்மைதான். அவரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ரஜினி கட்சி தொடங்க வேண்டும். அவர் வந்த பின் வெற்றிடம் போகும்.
தமிழகத்தில் ஆளுமையான தலைவராக ரஜினி உருவெடுப்பார். ரஜினி வருவார். ரஜினி கட்சியில் சேர்வது குறித்து எல்லாம் கருத்து கூற முடியாது, என்று அழகிரி பதில் அளித்துள்ளார். ஆனால் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு அழகிரி பதில் அளிக்கவில்லை.
Comments