அதிமுக கொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளான கோவை இளம் பெண்ணின் இடதுகால் அகற்றம்

Coimbatore Accident Victim Rajeswaris left leg amputated கோவை: அதிமுக கட்சி கொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த கோவை இளம் பெண் ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 11-ந் தேதி சாலையில் நடப்பட்டிருந்த கட்சி கொடிகம்பம் கீழே விழுந்ததில் விபத்தில் சிக்கினார் இளம்பெண் ராஜேஸ்வரி. இதில் அவரது கால்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரியின் இடதுகாலில் ரத்த நாளம் கடுமையாக பாதித்திருந்தது. இதனையடுத்து ராஜேஸ்வரியின் இடதுகாலை மருத்துவர்கள் இன்று அகற்றினர்.
தற்போது ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் பொதுமக்களிடம் மருத்துவ நிதி உதவியை கோரியுள்ளனர்.

Comments