
ஏற்கனவே இந்தியாவில் நிலவி வரும் போட்டி காரணமாக நஷ்டத்தில் உள்ள இந்த நிறுவனங்கள், தற்போது கட்டண உயர்வை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து கட்டண உயர்வை அதிகரிப்பதாக கூறியிருந்தாலும், எவ்வளவு என்ற கருத்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் இதையெல்லாம் மவுனமாக கவனித்து கொண்டிருக்கும் ஜியோவும், மற்ற நிறுவனங்களின் கட்டண அதிகரிப்புக்கு பிறகு கட்டணத்தை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வோடபோன் நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் கட்டண அதிகரிப்பை செய்தவுடன், ரிலையன்ஸ் ஜியோவும் தன் பங்குக்கு கட்டணத்தை உயர்த்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்.என்.எல் வட்டாரத்தில், பி.எஸ்.என்.எல் ஆராய்ந்து பொறுமையாக செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வாய்ஸ் கால்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட பின்னர், ரிலையன்ஸ் ஜியோ கடந்த அக்டோபர் முதல் ஜியோ அல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. இது சமச்சீர் அற்ற ஐயூசி கட்டண விகிதத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்த நிலையில், இதுவே ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மத்திய தொலைத் தொடர்பு துறையின் நிலுவை தொகையை திரும்ப செலுத்தும் படி, உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்பளித்தது. இந்த நிலையி ஏர்டெல் நிறுவனம் 21,000 கோடி ரூபாயும், இதே வோடபோன் நிறுவனம் சுமார் 28,000 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும் என கூறியிருந்தது. இந்த நிலையில் இந்த தொகையை செலுத்த முடியாத நிலையிலேயே இந்த நிறுவனங்கள் கட்டண உயர்வை மேற்கொண்டுள்ளன.
இதனால் இந்த நிறுவனங்கள் கட்டண உயர்வை அதிகரித்துள்ள நிலையில், ஜியோவும் கட்டண உயர்வை மேற்கொள்ளலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் நஷ்டத்தினை குறைக்கவும், போட்டி நிறுவனங்காளோடு போட்டி போடவும், அவர்களின் கட்டண உயர்வை பார்த்த பின், அதற்கேற்றவாறு உயர்வு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments