புலிகள் வீழ்ந்தலில் பிழைத்த சீமானுக்கு "வஞ்சபுகழ்ச்சி" வாழ்த்து - ட்விட்டர் அலப்பறை

Imageஇன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு.சீமானுக்கு அவரின் தம்பிகள் ட்விட்டரில் வாழ்த்து சொல்லி வரும் வேளையில், அவரின் வானளாவிய(?) பேச்சுக்களை வைத்து வஞ்சபுகழ்ச்சியாக பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

அவற்றில் சில :

ஈழத்தமிழினத்தின் இன்றைய தலைவனே.! 

நாளைய ஈழத்தின் மீட்சி நாயகனே.! 

நெய்தல் படை அமைத்து ஈழம் மீட்பேன் என்று சூளுரைத்த பெருந்தகையே.!

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று திருவாய் மலர்ந்த செம்மலே.! 

ஆயிரம் யானையை கப்பலில் ஏற்றிய வீரத்தமிழ் மகனே.! 

அரிசிக்கப்பலில் சுட்டு விளையாடிய பச்சைக்கொழந்தையே.!

ஆமைக்கறிக்கும் அடையாளம் கொடுத்த வள்ளலே.! 

அக 74 இல் பயிற்சி எடுத்த இந்தியாவின் முதல் குடிமகனே.! 

கருப்பு பூனை படை பாதுகாப்போடு முட்டுச்சந்துகள் எல்லாம் சுற்றித்திரியும் ஆமைக்குஞ்சே.!

வாயை வைத்தே ஆடம்பர கார் வாங்கிய ஏழையின் மகனே.! 

பெரியாரின் கைத்தடி பிடித்து நடைபழகி கலைஞரின் பேனாவை எடுத்து எழுதப்பழகி கறுப்புச் சட்டைக்கே கறுப்பு பூசிய பச்சைத்தமிழனே.!

முன்னாள் தீவிரவாதியும், இன்னாள் முப்பாட்டனுமாகிய முருகனின் வேலை கையிலெடுத்து புரட்சி செய்த பேரப்பிள்ளையே.! 

ஈவ்டீசிங் கேசில் உள்ளே போடப் படவேண்டிய அயோக்கியன் கிருஷ்ணனை மாயோன் என்று பெயர் மாற்றி எம் ஆயர் குலத்தலைவன் ஆக்கிய மீட்பனே.!

பயங்கரவாதியாக அறியப்பட்ட தலைவர் பிரபாகரனை போராளியாக மாற்றிய பெரும் தலைவனே.!

ங்கோத்தா என்பதை தொல்காப்பியத்தில் சேர்த்து பச்சைத்தமிழின் தொன்மையை உலகறியச் செய்த மகானே.! 

தலைவரோடு நின்றெடுத்த ஒற்றைப்படத்தை வைத்து உலகமெல்லாம் கட்சிக்கிளை திறந்து காசு பார்க்கும் உணர்சித் தமிழனே.!

தன்னை ஆதரிப்பவனையும், தான் ஆதரிப்பவனையும் பச்சைத்தமிழன் என்றும் எதிர்ப்பவனையெல்லாம் வந்தேறியென்று வகைப்படுத்தும் மரபணு விஞ்ஞானியே.!

இந்திய உளவுத்துறையின் செல்லப்பிள்ளையே.! எந்த இயக்கத்தையும் ஆதரித்துப்பேச அனுமதி பெற்றிருக்கும் தென்னாட்டின் சிங்கமே.!

உன் புகழை எழுத இந்த த்ரெட் போதாது.! 52 ஆவது அகவை காணும் இந்நாளில், பொய்களை குறைத்து புதிது புதிதாக அடித்துவிடும் கதைகளையும் குறைத்து "நின் பொய்யும் நின் புரட்டும் இவ்வுலகம் உள்ளவரை நின்று நிலைக்க" வாழ்த்துகிறேன்.

Comments