
எவ்வளவு தான் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும் அம்பானியின் வளர்ச்சி மட்டும் அசுர வளர்ச்சியாக இருப்பதன் காரணம் ஒன்றே ஒன்று தான், அது மோடியின் அம்பானி நட்பு. எத்தகைய நிலையிலும் அம்பானி நஷ்டம் அடையக்கூடாது என்பதில் மோடி மிக,மிக கவனமாக இருக்கிறார் என்பதற்கு பல ஆயிரம் கோடி அம்பானி கடனை சத்தமே இல்லாமல் தள்ளுபடி செய்ததன் மூலியமாக நாம் அறிந்துகொள்ளலாம்.
2017-ல் அம்பானியின் சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி. இரண்டு ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு சுமார் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 2019-ல் அவரின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி. அதே நிலையில், 2017-2018 காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) 7.2%. ஆனால், நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 4.5% என்ற நிலையில் கடும் வீழ்ச்சியில் இருக்கிறது. இது மேலும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
எத்தனை எச்சரிக்கை, புள்ளி விவரங்கள் தந்தாலும் அம்பானியின் வளர்ச்சி ஒன்றே இந்தியாவின் வளர்ச்சி என்ற நினைப்பில் முதாலாளிகளின் ஆட்சியாக மோடியின் ஆட்சி செயல்பட்டுக்கொண்டு இருப்பது மக்களின் மத்தியில் பீதியை கிளப்பி இருக்கிறது.
"வீதிக்கு வாருங்கள் இந்துக்களே...", என்ற பா.ஜ.க.வின் கோஷத்திற்கு ஏற்ப இன்றைய நிலையில் அனைத்து இந்தியர்களும் வீதியில் தான் நிற்கிறோம். அம்பானியின் வளர்ச்சியில் காட்டும் அக்கறையில் 1% அளவிலாவது இந்திய பொருளாதார வளர்ச்சியில் இனிமேலாவது மோடி அரசு காட்டுமா என்பது தான் மக்களின் இன்றைய புலம்பலாக இருக்கிறது.
Comments