
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் எங்கெல்லாம் பொதுவாக அதிக மழை பெய்தால் வெள்ளம் தேங்குமோ அந்த இடம் ஒன்று விடமால் வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்த மாதம் முழுவதுக்கம் சேர்த்து வைத்து ஒரே நாளில் கடுமையான மழை கொட்டியதால் ஆறுகள் செல்லும் பாதையில் வெள்ளம் பெருமளவு பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் திருநீர்மலை- திருமுடிவாக்கம் சாலையை பிளந்து கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதால் அந்த பாதை துண்டிப்புக்கு உள்ளாகி உள்ளது.
அந்த வெள்ளம் பாய்ந்தோடுவதை பார்க்கும் போது மிக அபாயகரமாக ஓடுவது தெரிகிறது. அதை பொதுமக்கள் மிரட்சியுடன் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வெள்ளத்தால் அந்த பகுதி மக்கள் கடும்அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Comments