
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார சீர்கேடு தொடர்பான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்தியாவில் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது . வேலைவாய்ப்பு இல்லை. நாளுக்கு நாள் பொருளாதாரம் யாரும் எதிர்பார்க்காத நிலையை அடைந்து வருகிறது. முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக தனியாருக்கு அளிக்கப்படுகிறது.
இதை பற்றி இன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, சிவசேனா, கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பிக்கள் கடுமையாக குரல் எழுப்பினார்கள். இந்தியாவின் ஜிடிபி தொடங்கி பணமதிப்பு வரை எல்லாம் மோசமாகிவிட்டது என்று கூறி இவர்கள் குரல் எழுப்பினார்கள்.
இதனால் அவையில் குழப்பம் நிலவியது. அதேபோல் காங்கிரஸ் எம்பிக்கள் இன்னொரு பக்கம் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்கள். காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மற்றும் எம்பி பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக அவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயே போராட்டம் செய்தனர். காஷ்மீரில் தலைவர்கள் அடைக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக அவையில் எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டனர். இவர்களை அமரும்படி சபாநாயகர் உத்தரவிட்டும் கூச்சல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
Comments