
தற்போதைய நிலையின் என்சிபியின் 53 எம்.எல்.ஏக்கள் சரத்பவார் பக்கம் உள்ளனர். இன்றைய உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக என்சிபி-சிவசேனா- காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் கோஷ்யாரியை இன்று காலை சந்தித்தனர். அப்போது தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதங்களை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகையில் இம்மூன்று கட்சி தலைவர்களும் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆளுநர் இதன் மீது என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை. புதிய அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இத்தீர்ப்புக்குப் பின்னரே இந்த ஆதரவு கடிதத்தின் நிலை என்ன? என்பது தெரியவரும்.
Comments