ஆஹா சூப்பர்.. இந்த வார இறுதியில் சென்னையில செம்ம மழை வெளுக்க போகுதாம்.. மற்ற ஊர்களிலும் தான்

 கோவை மதுரையில் சென்னை: காற்று மற்றும் மேகங்களின் வருகை காரணமாக சென்னை நகருக்கு நல்ல மழையை சென்னை நகரம் இந்த வார இறுதியில் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் இந்த வார இறுதியில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழைக்கு உறுதியாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மழை சென்னையில் டிசம்பர் முதல் வாரம் வரை தொடரவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவை நம்பிக்கை தெரிவித்துள்ளன.

செவ்வாய்கிழமையான நேற்று சென்னை நகரின் சிலப்பகுதிகளில் லேசான தூறலுடன் பிற்பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் வானம் பொதுவாகவே மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தனர்.

ஸ்கைமேட் வெளியிட்டுள்ள பதிவில், , "எங்கள் வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நவம்பர் 28 முதல் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்று கிழக்கு நோக்கி வீசும், இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் சென்னையின் பல பகுதிகளில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை கனமழையும் மிதமான மழையை பெய்யும் என எதிர்பார்க்கலாம்.

இப்படி இந்த மாத இறுதியில் சென்னை மற்றும் தமிழக பகுதிகளில் பெய்ய போகும் மழை, இந்த நவம்பர் மாதத்தில் பெய்த மழை அளவைவிட மிக அதிகபட்ச அளவுகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த மழை சென்னையில் மட்டுமல்ல, காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கல், பம்பன், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் போன்ற பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்யக்கூடும்.

மதுரை, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2 க்குப் பிறகு, லேசான மழை தொடரும். அதன்பிறகு படிப்படியாக மழையின் அளவு குறையும்" என ஸ்கைமேட் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் தற்போது வரை சென்னை நகரத்தில் 37% மழை பற்றாக்குறை உள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ஒரு பதிவில் 2008 ஆம் ஆண்டு சம்பவம் மறுபடியும் இருக்கலாம், நவம்பர் மாதத்தின் பெரும்பகுதி வறண்டு இருந்தது. அதன்பிறகு டிசம்பரில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது எனவே அது போல் இப்போது நடக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Comments