'திருவள்ளுவர் நாத்திகர் அல்ல': மாபா

'திருவள்ளுவர் நாத்திகர் அல்ல': மாபா''திருவள்ளுவர், சைவ அல்லது வைணவ துறவியாக இருக்கலாமே தவிர, நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.உலகத் தமிழ்ச் சங்கத்தில், கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின், அமைச்சர் பாண்டிய ராஜன் கூறியதாவது:பிரிட்டிஷ் அரசு தான், திருவள்ளுவருக்கு முதல் வடிவம் கொடுத்தது.

அனைவருக்கும் பொதுவான வள்ளுவரை, அவரவர் விருப்பப்படி பார்ப்பதில் தவறில்லை. திருவள்ளுவர், சைவ அல்லது வைணவ துறவியாக இருக்கலாமே தவிர, நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை.ஓராண்டில், கீழடியில் உலகத்தரமிக்க அருங்காட்சியகம், 12.20 கோடி ரூபாயில் அமைக்கப்படும். 10 ஆயிரம் பொருட்கள் உலகத்தர அருங்காட்சியகத்தில்வைக்கப்படும்.

மதுரையில் கொந்தகை, மணலுார், அகரம் கிராமங்களில், அகழாய்வு நடக்கும். கூடுதலாக, மூன்று இடங்களில் அகழாய்வு நடத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். ஆதிச்சநல்லுாரில், ஏழாம் கட்ட ஆய்வு நடத்த உள்ளோம். மத்திய அரசு செய்த, முதல் இருகட்ட அகழாய்வு அறிக்கை, தமிழாக்கம் செய்து வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments