டம் டமால்..டூமில்.. சப்தத்துடன் இடி.. சென்னையில் பரவலாக கனமழை.. திருமழிசையில் அடடா மழை அடை மழை

Heavy rain lashes in Chennai and other parts with thunder சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழையில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதில் சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகியவற்றில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து முகப்பேர் மேற்கு, அம்பத்தூர், நொளம்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கே கே நகர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அது போல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசையில் கனமழை பெய்தது.


இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Comments