மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்!

காஜலின் கண்டிசன் ஜெய்பூர்: திருமணத்திற்கு தயாராகி வரும் நடிகை காஜல் அகர்வால் அஜ்மீர் தர்காவில் சிறப்பு வழிபாடு நடத்திய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது அவர் கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் தற்காப்பு கலைகள் கற்று வருகிறார்.

இந்தியன் 2 படத்தை தவிர வேறு எந்த புதிய படத்திலும் காஜல் கமிட்டாகவில்லை. திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகலாம் என்ற ஐடியா அவருக்கு வந்துவிட்டது. 34 வயதாகும் காஜலுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தனது வருங்காலக் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே வெளியிட்டார் காஜல். அவருக்கு மாப்பிள்ளை உறுதியாகி விட்டதாக தெரிகிறது. தொழிலதிபர் ஒருவர் காஜலை மணக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

அதை மேலும் உறுதிப்படுத்து வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தியுள்ள நடிகை காஜல் அகர்வால். தலையில் பூக்கூடையை சுமந்து வந்து அவர் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. அந்த புகைப்படங்களில் காஜலுடன் அவரது தாயும் உள்ளார். மகளுக்கு திருமணம் உறுதியாகிவிட்ட சந்தோஷம் தாயின் முகத்தில் தெரிகிறது.

திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைத்து விட்டதால் தான் காஜல் இந்த நேர்த்தி கடனை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விரைவில் அவர் தனது வருங்கால கணவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments