சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் முதல்வர் பட்னாவிஸ்.. ராஜினாமா செய்ய திட்டமா?

Maharashtra: Devendra Fadnavis to meet press soon, may announce his resignation மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மெஜாரிட்டிக்கு 42 இடங்கள் குறைவாக இருந்தும் கூட அங்கு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வசதியாக தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால் பாஜகவிற்கு மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் பாஜக கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் பதவி விலகிவிட்டதாக செய்திகள் வருகிறது. இவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் அளித்துள்ளார் என்கிறார்கள். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். பெரும்பாலும் பட்னாவிஸ் பதவி விலகல் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Comments