
சிங்கபெருமாள் கோவில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருபுறமும் மழைத்தண்ணீர் முழங்கால் அளவு தேங்கி நிற்பதால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களில் செல்லும் வாகனங்களும் வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.
சிங்கபெருமாள்கோவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் பணிகள் முறையாக செய்யாமல் போனதால் மழை தண்ணீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.
ஆண்டுதோறும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்காதவாறு கால்வாய் அமைத்து அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். தெரிவித்து ஓராண்டாகியும், அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
உடனடியாக தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருவது வழக்கமாகிவிட்டது.
Comments