
கேரளாவை சேர்ந்தவர் பிரணவ், மாற்றுத்திறனாளி. இவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. கால்களை கைகளை போல் பயன்படுத்தி வந்தார். லோக்சபா தேர்தலில் கூட மின்னணு ஓட்டு இயந்திரத்தில் கால்களை பயன்படுத்தி ஓட்டு போட்டார்.
இந்நிலையில், கேரள மாநில நிவாரணத்திற்கு நிதி அளிக்க பிரணவ், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது, பிரணவ் கால்களை, தன்னுடைய கைகளால் பிடித்து முதல்வர் விஜயன் வரவேற்றார். நிவாரண நிதி அளித்த பின்னர், முதல்வருடன், பிரணவ் கால்கள் மூலம் மொபைலை பிடித்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் வெளியாக, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
Comments