
பிறந்த நாள் விழா, கமல் 60 விழா.. என அனைத்தும் முடிந்த நிலையில், நாளை ஒரு ஆபரேஷன் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "2016ம் ஆண்டு தன் வீட்டு மாடிப்படியில் இருந்து எதிர்பாராமல் தவறி விழுந்ததில், கமலின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அப்போதே அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில், காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அதன் பிறகு பல வருஷங்கள் ஆன நிலையில், அவர் சினிமா, கட்சி என்று பிஸியாக இருந்துவிட்டார். இதனால் பொருத்தப்பட்ட கம்பியை நீக்க முடியவில்லை.. அதனை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. போதுமான ஓய்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி காலில் பொருத்தப்பட்ட கம்பி நீக்கப்பட உள்ளது. இதற்காக, நாளை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு ஓரிரு நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார். அதன் பின்னரே பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்திப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments