
திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்பது, யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும், அவர் இப்படித் தான் இருந்திருப்பார் என, ஒரு தோற்றத்தை கொடுத்து வந்தனர்.
வெள்ளை நிறம்
அதன்பின், தமிழக அரசு, திருவள்ளுவர் படம் என, ஒன்றை அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் அவர், விபூதி அணியவில்லை. வெள்ளை நிற உடை உடுத்தியிருப்பார். இரு தினங்களுக்கு முன், பிரதமர் நரேந்திரமோடி, தாய்லாந்தில், அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட, திருக்குறளை வெளியிட்டார்.
துரோகம்
அதன் தொடர்ச்சியாக, தமிழக, பா.ஜ., சார்பில், 'டுவிட்டர்' பக்கத்தில், நெற்றியில் விபூதி, காவி உடை அணிந்த, திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டது. அந்த படத்தின் கீழே, 'கடவுளை துாற்றி, இறை நம்பிக்கை கொண்டோரை பழிப்பவருக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? 'அன்றே வள்ளுவர் சொன்னதை, இன்று, தி.க.,வும், தி.மு.க.,வை நம்பி வாழும் கம்யூனிஸ்ட்டுகளும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தனர். இதற்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
அவர், 'பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற வள்ளுவரை, காவி கூட்டம், தன் கட்சிக்கு கச்சை கட்ட துணைக்கு அழைப்பது, தமிழ் துரோகம். 'எத்தனை வண்ணம் பூசினாலும், சாயம் வெளுத்துவிடும். வண்ணம் பூசுவதை விட, திருக்குறளை படித்து திருந்த பாருங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
கண்டனம்
அதே போல், கம்யூ., கட்சிகள், வி.சி., உள்ளிட்டவை, பா.ஜ.,வுக்கு கண்டனம் தெரிவித்தன. அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூவருக்கு விபூசி, காவி உடை அணிவித்தது சரியா, தவறா என, சர்ச்சை எழுந்துள்ளது.
கடும் மோதல்
சமூக வலைதளங்களில், இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில், சமூக விரோதிகள், திருவள்ளுவர் சிலையை அவமதித்தது, எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் அமைந்துவிட்டது. தமிழக பா.ஜ., சார்பில், நேற்று வெளியிடப்பட்ட பதிவில், 'பிரதமர் மோடி, திருக்குறளை முன்னெடுத்து சிறப்பிப்பதை, இருட்டடிப்பு செய்ய, கருப்பு சட்டைக்காரர்களால், போலியாக கட்டமைக்கப்பட்டதே, திருவள்ளுவர் குறித்த சர்ச்சை.
'எதிர்வினை ஆற்ற முடியாமல், காவியம் பிழையென்று கறுப்பு சாயம் பூச பார்த்துள்ளனர், கறுப்பு சட்டை கயவர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தனர். பிரதமர் மோடி, திருக்குறளை முன்னெடுத்து சிறப்பிப்பதை, இருட்டடிப்பு செய்ய, கருப்பு சட்டைக்காரர்களால், போலியாக கட்டமைக்கப்பட்டதே, திருவள்ளுவர் குறித்த சர்ச்சை.
Comments