
அதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017-ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இதன் வரிசையாக உள்ளாட்சி தேர்தலை பல்வேறு காரணங்கள் சொல்லி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமானலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் திடீர் என்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளது.தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது. இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பாக இந்த முறை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகுதி வரையறை தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.
Comments