மஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம்

மும்பை: ஆட்சி அமைக்கப்போவது யார் என நேற்று நிமிடத்திற்கு நிமிடம் நடந்த திருப்பங்கள் குறித்து, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக, தேசியவாத காங்., முடிவெடுத்திருந்தாலும், காங்கிரஸ் தரப்புக்கு தயக்கம் உள்ளது.

இது குறித்து, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருடன் பேச்சு நடத்தி, அதற்கு பின் முடிவு எடுக்கலாம் என, காங்கிரஸ் கருதுகிறது. இதனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம், சிவசேனாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதற்காகவே, சிவசேனா தலைவர்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். அதற்கு, கவர்னர் மறுத்து விட்டார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments