
இதில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். இதேபோல் ஏராளமான வழக்கறிஞர்களும் காயம் அடைந்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு எதிராக போலீசார் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் அதிகாரி மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து சமசர பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராடி வருகிறார்கள். இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் டெல்லி போலீசாருக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments