
டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் விடுதி கட்டண உயர்வு 300% அதிகரிக்கப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இன்றும் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கல்வி கட்டண உயர்வில் 50% குறைப்பதாக ஜே.என்.யூ. நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையிலான பொருளாதார உதவி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய கல்வித்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments