சென்னை: லேட்டாக வந்தாலும் சரியான
மழையைப் பெற்றுள்ளது சென்னையும், புறநகர்ப் பகுதிகளும். சும்மா கிழி என்று நேற்றுதான் ரஜினி பாடல் வெளியானது. ஆனால் மழை வந்து சென்னையை கிழித்துப் போட்டு விட்டது. புறநகர்ப் பகுதிகள்தான் நிறைய பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மழையைப் பெற்றுள்ளது சென்னையும், புறநகர்ப் பகுதிகளும். சும்மா கிழி என்று நேற்றுதான் ரஜினி பாடல் வெளியானது. ஆனால் மழை வந்து சென்னையை கிழித்துப் போட்டு விட்டது. புறநகர்ப் பகுதிகள்தான் நிறைய பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த வட கிழக்கு பருவ மழை சீசன் சரியாகவே இல்லை. குறிப்பாக சென்னையில் ஆரம்பத்தில் கொஞ்சம் மழை பெய்தது. அப்புறம் ஆளையே காணோம். இந்த நிலையில்தான் நேற்று திடீரென வந்து வெளுத்தெடுத்து விட்டது ஒரு சூப்பர் மழை.
It should have rained heavily at #Thuraipakkam early morning. #ChennaiRains @ChennaiRains pic.twitter.com/L882SmaXsy— Rajesh Kumar R (@jdrajeshk) November 28, 2019
இந்த சீசனிலேயே இதுதான் வெள்ளக்காடாக்கி விட்டுச் சென்ற முதல் மழை. அந்த வகையில் சென்னை மக்களுக்கு ஹேப்பிதான். குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடாமல் வெளுத்தெடுத்து விட்டது மழை. சென்னை நகரிலும் மழை நன்றாகவே பெய்துள்ளது. இந்த மழைதான் இப்போது டிவிட்டரில் டிரெண்டிங்.
இது துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு சாலை. அடித்த மழையில் வெள்ளமென சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்.
இவரே தான் மழை நீரை சேமிப்பது குறித்த ஒரு வீடியோவையும் போட்டுள்ளார். இதை அனைவருமே பின்பற்றினால் ரொம்பவும் நல்லதுதான்.
அடித்து ஊற்றிய மழைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு லீவு கிடைத்து விட்டது. சென்னை திருவள்ளூருக்குக் கிடைக்கலை. இன்று கிடைத்தாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கன மழையால் தாம்பரம் - வேளச்சேரி சாலை மொத்தமாக டிராபிக் ஜாம் ஆகியுள்ளது. பல இடங்களில் மழை நீர் ஓடுகிறது.
இந்த மழை எதிர்பார்த்த ஒன்று. இன்னும் நிறையப் பெய்ய வேண்டும் என்று இவர் மழையை வரவேற்றுள்ளார். மழை பெய்தால் சங்கடப்படாமல் அதை சந்தோஷமாக வரவேற்ற காலம் போய் விட்டது. வீட்டுக்குள் வந்து விடுமோ.. வெள்ளக்காடாகி விடுமோ என்ற பயம்தான் இப்போதெல்லாம். ஆனால் இன்று இந்த மழை நீருக்காக உலகமே தவமிருக்கிறது. எனவே வராது வந்த இ்நத மாமழையை வரவேற்று மழை நீரை சேமிக்க முயற்சிப்போம்.
Comments