சென்னை: கோவை சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில், அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ., கார்த்திக்கிற்கு போலீசார் அனுமதி ஏற்பட்டது.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: வேலூரில், திமுக எம்எல்ஏ., நந்தகுமாரை, ஆளுங்கட்சி மிரட்டியது போல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ., கார்த்திக்கும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கே இந்த கதி எனில், அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகார போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments