அச்சுறுத்தப்பட்ட அஜித் பவார்.. பின்னணியில் யார்?.. விரைவில் சாம்னாவில் அம்பலம்- சஞ்சய் ராவத்

Ajit Pawar blackmailed, Saamana will expose culprits: Sanjay Raut மும்பை: பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்படி அஜித் பவார் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அவரை அச்சுறுத்தியவர்கள் யார் என்பது குறித்து சாம்னா நாளிதழில் விரைவில் வெளியாகும் என சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் அவசர அவசரமாக பாஜக இன்று பதவியேற்றது. அதில் தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இதனால் சரத்பவாரே அதிர்ச்சி அடைந்துவிட்டார். இந்த நிலையில் அஜித் பவாரின் முடிவு என்சிபியின் முடிவல்ல என்றும் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் பாஜகவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றும் சரத்பவார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சிவசேனாவின் செய்தித் தொடர்பாளரும் சாம்னா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் கூறுகையில் அஜித் பவார் மீதான ஊழல் வழக்கை காரணம் காட்டி அவர் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.

அதன்பின்னணியில் யார் உள்ளனர் என்பதை விரைவில் சாம்னாவில் அம்பலப்படுத்துவோம். அஜித் பவாருடன் சென்ற 8 எம்எல்ஏக்களில் 5 பேர் திரும்பி விட்டனர். அவர்கள் பொய் கூறப்பட்டு கிட்டத்தட்ட கடத்தி சென்றுவிட்டனர். தற்போது உண்மையை அறிந்து அவர்கள் திரும்ப வந்துவிட்டனர். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அஜித் பவாரே திரும்பி வந்துவிடுவார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Comments