
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திராத் குமார், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். நவம்பர் 8 (இன்று)ம் தேதி சென்னையில் இருந்த புறப்பட்ட துணை முதல்வர் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். நாளை முதல் நவம்பர் 17 வரை அமெரிக்காவில் ஒ பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறும் குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து துணை முதல்வர் கொள்கிறார். நவம்பர் 13 மற்றும் 14-ல் வாஷிங்டன்னில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். நவம்பர் 17ம் தேதி அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.
Comments