பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் கடிதம்

 பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் கடிதம்சென்னை: 'தொண்டர்களின் மனச்சாட்சியாக, தி.மு.க., பொதுக்குழு கூடுகிறது' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதிய கடிதம்:அ.தி.மு.க., ஆட்சியை மாற்ற வேண்டும் என்பது, தமிழக மக்களின் பெரும் விருப்பம். அதை, தி.மு.க., தலைமையிலான அணி தான் செய்யும் என்பது, தமிழகத்தின் உறுதியான நம்பிக்கை. அதற்கான, ஜனநாயக களத்தை, தி.மு.க., எதிர்பார்த்து இருக்கிறது. தி.மு.க., பொதுக்குழு கூட்டம், வரும், 10ம் தேதி கூடுகிறது. நாட்டுக்கு எப்படி லோக்சபாவோ, அதுபோல, தி.மு.க., வுக்கு பொதுக்குழு. தி.மு.க.,வின் எதிர்கால பயணத்திற்கு, தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க, ஒவ்வொரு தொண்டரின் மனச்சாட்சியாக, தி.மு.க., பொதுக்குழு கூடுகிறது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

தன் டுவிட்டர் பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:ஈ.வெ.ராமசாமி சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காக பாடுப்பட்டவர்களை அவமதிப்பது, தொடர்கதையாகி விட்டது.இதற்காக, போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும், அ.தி.மு.க., அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments