
இந்தியாவிலேயே தீவிரவாதிகளை நாங்கள் மட்டுமே ஒழிக்க முடியும், எங்களுக்கு மட்டுமே அந்த தைரியம் இருக்கிறது என தனக்கு தானே சான்று கொடுத்து தங்களை தீவிரவாதிகளின் தீவிரவாதி என காட்டிக்கொள்ளும் பா.ஜ.க. தனது தேர்தல் நிதியாக பெருமளவு தொகையை ஒரு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய கம்பெனியில் இருந்து பெற்றிருக்கும் தகவலை தி வயர் (
www.thewire.in) பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. இந்த தகவல் தற்பொழுது நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

1993-ல் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பிற்கு காரணமாக தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்த RKW Developers கம்பெனியிடம் இருந்து சுமார் 10 கோடியை நன்கொடையாக பெற்று இருந்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இந்த RKW Developers கம்பெனி மும்பை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியாக தாவுத் இப்ராகிம் தொடர்புடைய நெருங்கிய கம்பெனி என்பது கூடுதல் தகவல்.
கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பீடு இழப்பு செய்து நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடி அரசு, அந்த பாதக செயலுக்கு சொன்ன காரணம், "கருப்பு பணம் ஒழியும், அதனால் தீவிரவாதம் முற்றிலும் அழிக்கப்படும்" என்பது தான். ஆனால், ஒரு புறம் தீவிரவாதிகளுக்கு எதிராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கள்ள உறவாக தீவிரவாத கும்பல்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக பெற்று இருக்கிறது மோடி அரசு.

தான் திருடன் மற்றவரை திருடன், திருடன் என்பானாம் என்பது போல தான் பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டு. அதாவது, பா.ஜ.க.விற்கு எதிராக அந்த கடவுள் ராமரே கேள்வி கேட்டாலும் அவரையும் Anti-Indian என்றே பட்டம் கட்டும் பழக்கம் கொண்ட பா.ஜ.க.வின் இத்தகைய தீவிரவாத கள்ள உறவு நாட்டின் பாதுகாப்பிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தீவிரவாதிகளிடம் இருந்து நேரடியாக தேர்தல் நிதி பெற்ற பா.ஜ.க.விற்கு எதிராக ட்விட்டரில்
#PakistanFundsBJP இந்திய அளவில் ட்ரென்ட் ஆகி வருகிறது.
Comments