கூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

MK Stalin urges to withdrawn cases against Kudankulam protestors சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய 9,000 பேர் மீதான வழக்குகளை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் 9,000 பேர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்தன.

இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கங்களில், கூடங்குளத்தில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசியல் நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகளை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Comments