
மகாரஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 6.40 மணிக்கு பதவி ஏற்கிறார். மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறும் விழாவில் ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிடவில்லை. இதனால் உத்தவ் தாக்கரே அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை அல்லது சட்டமேலவை உறுப்பினராக வேண்டும்.
உத்தவ் தாக்கரே சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? அல்லது எம்.எல்.சி.யாக தேர்வாவாரா என்பது கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் தெரியவரும்.
இதனிடயே உத்தவ் தாக்கரே தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை டிசம்பர் 3-ந் தேதிக்குள் சமர்பிக்கவும் ஆளுநர் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.
Comments