5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது அல்ல.. மேல்முறையீடு செய்வோம்.. சன்னி வக்ஃப் வாரியம்

Sunni Waqf Board go for appeal against Ayodhya verdict டெல்லி: 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது இல்லை என்றும் தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மேல்முறையீடு செய்வோம் என்றும் சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர்.

அதில் பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் உள்ள கட்டடங்கள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது இல்லை. சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை முஸ்லீம் அமைப்புகள் நிரூபிக்கவில்லை. எனவே நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய இஸ்லாமிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும். வக்ஃபு வாரியம் ஏற்கும் இடத்தில் வழங்க உத்தரப்பிரதேச அரசுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சன்னி வக்ஃப் வாரியம் கூறுகையில் 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மேல்முறையீடு செல்வோம் என தெரிவித்துள்ளனர்.

Comments