
உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், லோக்சபா தேர்தல் அடிப்படையில் அக்., 4ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 12 லட்சத்து 80 ஆயிரத்து 870 ஆண்கள், 13 லட்சத்து 13 ஆயிரத்து 874 பெண்கள், 110 இதரர் உட்பட 25 லட்சத்து 94 ஆயிரத்து 854 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் கமிஷன் உத்தரவுபடி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடக்கிறது. நவ.,30 வரை வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஆர்.டி.ஓ., மாநகராட்சி துணை கமிஷனர் அலுவலகங்களில் சரிபார்க்கலாம். 'வோட்டர்ஸ் ெஹல்ப்லைன்' என்ற அலைபேசி செயலி வாயிலாகவும் சரிபார்க்கலாம்.
மேலும் டிச., 16 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் 2020 ஜன., 15 வரை 2001க்கு பின் பிறந்த 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இப்பணிகள் ஜன., 27 ல் முடிக்கப்படும். அதன் பின் பிப்., 7 இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும்.
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் வெளியானால் அக்., 4 ல் வெளியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments