
சுமார் 75 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்பாளர்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்த்தது. இந்நிலையில் விருப்ப ஓய்வுக்கான அறிவிப்பு வெளியான முதல் இரண்டு வாரத்திற்கு உள்ளாகவே 75 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது மொத்தம் உள்ள ஊழியர்களில் சுமார் பாதி அளவு ஆகும். இந்த தகவலை பிஎஸ்என்எல் தலைவர் பிகே புர்வார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணபித்துள்ள ஊழியர்களுக்கு வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவார்கள்.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால் சுமார் 7000 கோடி சம்பள பில் மிச்சமாகும் என பிஎஸ்என்எல் நினைத்தது. ஆனால் அதற்கும் மேலாகவே ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்பார்கள் என்பது தெரியவருகிறது.
விருப்ப ஓய்வு பெறுவோருக்கு மிகப்பெரிய அளவில் கணிசமான ஊக்கத்தொகையும் ஓய்வுத்தொகையும் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளால் பலரும் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் மாத ஊதியங்கள் பிஎஸ்என்எல்லில் தாமதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் வேலை குறித்த அச்சம் மற்றும் பீதி காரணமாக பலரும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இப்போதைக்கு ஊழியர்களுக்கு உடனடி நன்மைஎன்றாலும் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு நஷ்டம் என்கிறார்கள்.
Comments