மத்திய அரசுக்கு அதிமுக பொதுக்குழுவில் நன்றி; 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக, பொதுக்குழு, அவைத்தலைவர், மதுசூதனன், முதல்வர், இபிஎஸ், ஓபிஎஸ்சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
முந்தைய பொதுக்குழு கூட்டம், 2017 செப்டம்பர், 12ல் நடந்தது. அதில், அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். விழாவிற்கு வருவோரை வரவேற்கும் விதமாக சிறப்பான அலங்கார வளைவுகள், கோயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்களை பரிசோதனை செய்வதற்காக பேக்கேஜ் ஸ்கேனர் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 2,400 பேருக்கு அழைப்பு விடப்பட்டுள்ள இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கிய தீர்மானங்கள்:

* உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு தொண்டர்கள் உழைத்திட வேண்டும்.
* நீட் தேர்வில் தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவது
* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி.
* இலங்கையில் உள்ள தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.
* அரசுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் பொய்பிரசாரம் செய்வதற்கு கண்டனம்.
* பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு.
* தமிழ்நாடு தினம் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு.
* இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Comments