சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணாபட்ட என்ற இடத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஒன்று உள்ளது. நேற்று (நவ.,7) இரவு இங்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ரூ.200 பணம் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், ரூ.500 வந்தது. இந்த தகவல், பரவியதை தொடர்ந்து ஏராளமானோர் பணம் எடுக்க திரண்டனர். தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள், விரைந்து வந்து ஏடிஎம்மை பூட்டினர். ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைக்கப்பட்டதால் தான் பணம் வந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் அனைத்தையும் சரிசெய்து மீண்டும் ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது.
Comments