
இந்த நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேட்டி அளித்தார். அதில், தமிழகத்தில் கன மழை பெய்தால், அதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு குறித்தும், புயல் சின்னம் குறித்தும் உடனுக்குடன் அறிவிக்கப்படும். மீனவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2 மேயர் இடங்களை பாஜக கேட்டுள்ளது. இரண்டு முக்கிய மாநகரங்களில் மேயர் பதவியை பாஜக கேட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நான் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது.
கட்சியினர் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். இதுபற்றி இறுதி முடிவை கட்சி தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும்.தேர்தல் அறிவித்த பின் பெரும்பாலும் எங்கள் முடிவை நாங்கள் தெரிவிப்போம். உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் ரெடியாகி வருவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. பாஜக எந்த இடங்களில் மேயர் பொறுப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு இதனால் அதிகமாகி இருக்கிறது.
Comments