இந்த மழை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், சென்னை தாம்பரத்தில் மட்டும் 6 மணி நேரத்தில் 146 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகச் சிறந்த மழை இது. நகரின் தென் பகுதியிலும், புறநகர்களிலும்தான் அதிக மழை பெய்துள்ளது.

முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. மகிழ்ச்சியாக இருங்கள். இது பெரிய மழை இல்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் தமிழகத்திற்கு இனிதான் பெரிய மழை காத்திருக்கிறது. டிசம்பர் 2, 3ம் தேதி கன மழைக்கு வாய்ப்புள்ளது. வறண்ட காற்று விடை பெறும்.
பகலில் வானம் சற்று வெறிச்சோடியிருக்கும். அதேசமயம், அவ்வப்போது மழை வந்து போகும். நம்மைப் பொறுத்தவரை அதிகாலை அல்லது இரவில்தான் மழைக்கான வாய்ப்பு. எனவே பகலில் சூரியன் சுட்டெரித்தாலும் கவலைப்படத் தேவையில்லை என்று பதிவு செய்துள்ளார் வெதர்மேன்.
Comments