முரசொலி நிலம் குறித்து அவதூறு - 1கோடி இழப்பீடு கோரி ஆர்எஸ்.பாரதி நோட்டீஸ்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முரசொலி நில விவகாரம் குறித்த கருத்தை உடனே அகற்ற வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Comments