1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Demolition of the Babri Masjid in 1992 was a violation of law: Supreme Court டெல்லி: 1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. இதில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: அயோத்தியில் மசூதி இருந்த இடத்துக்கு முன்னர் கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை ராம் லல்லா அமைப்பினரால் நிரூபிக்க முடியவில்லை. முஸ்லிம்கள் மசூதி இருந்த இடத்தை கைவிடவில்லை.

இந்துக்கள் வெளிமுற்றத்தில் வழிபாடு நடத்தி உள்ளனர். பாபர் மசூதியானது காலி நிலத்தில் கட்டப்படவில்லை என்கிற தொல்லியல்துறை வாதம் ஏற்கப்படுகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் 12-ம் நூற்றாண்டில் இருந்து 16-ம் நூற்றாண்டுவரை என்ன மாதிரியான சர்ச்சைக்குரிய இடம் இருந்தது என்பதை விளக்கவில்லை.

1934, 1949-ம் ஆண்டுகளில் பாபர் மசூதி சேதப்பட்டது சட்டத்துக்கு எதிரானது. 1949-ல் இந்துக்கள் சிலைகளை உள்ளே வைத்தது சட்டத்துக்கு முரணானது. 1992-ல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்ததும் சட்டத்துக்கு எதிரானது.

1857-ம் ஆண்டுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய நிலம் தங்கள் வசம் இருந்தது என்பதை சன்னி வக்பு வாரியம் நிரூபிக்கவில்லை. அயோத்தியில் சன்னி வக்பு வாரியம் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் முழுவதையும் இந்துக்கள் தரப்பான ராம்ஜென்ம பூமி நிவாஸிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments