நவ.16-ல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு

Campaigning for Sri Lanka Presidential elections to end today கொழும்பு: இலங்கையில் நவம்பர் 16-ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்தல் களத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சேவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையேதான் பிரதான போட்டி.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினர் கோத்தபாய ராஜபக்சேவும் மற்றொரு தரப்பின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம் கட்சிகளில் பெரும்பாலானவை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. ஆனால் கருணாநிதி, வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிக்கின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதற்கு பின்னர் எந்த ஒரு கட்சியினரும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Comments