சேனாவிற்கு 16, என்சிபிக்கு 15, காங்கிரசுக்கு 12.. மகா.வில் புது கூட்டணி பார்முலா.. விரைவில் ஆட்சி

இறுதி கட்டம் மும்பை: மகாராட்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. பாஜக சிவசேனா இடையில் இன்னும் உடன்படிக்கை எட்டப்படவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் சிவசேனாவுடன் சேராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால் அங்கு நிகழ்ந்து வந்த அரசியல் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை. மகாராஷ்டிராவில் யார்தான் ஆட்சி அமைப்பார்கள், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையிலான கூட்டணி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்று தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது. இதில் முக்கியமான உடன்படிக்கை எட்டப்படும் என்று முடிவாகி உள்ளது.

அதன்பின் நாளை சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் மூன்று கட்சிகளும் ஆலோசனை நடத்த உள்ளது. நாளை மாலை மூன்று கட்சிகளும் சேர்ந்த முடிவு எடுத்த பின் அறிவிப்பு வெளியிடும். இதில் சிவசேனா கட்சிக்கு அதிகமாக 16 அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 12 அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும். மூன்று கட்சிகளும் இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. நாளை இதை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்.

மேலும் சிவசேனா கட்சிக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி அளிக்கப்படும். அதேபோல் சிவசேனா கட்சிக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி அளிக்கப்படும். ஆனால் யாருக்கு முதலில் முதல்வர் பதவி கிடைக்கும் என்று முடிவாகவில்லை.

மேலும் காங்கிரஸ் கட்சி ஐந்து வருடமும் துணை முதல்வர் பதவியில் இருக்கும். அல்லது இரண்டரை வருடம் மட்டும் துணை முதல்வர் பதவியில் இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் ரோல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments