
அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் இந்த வழக்கு. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கு மிகவும் முக்கியமானது என்பதால் நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி, வாரணாசி, மதுரா உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளதால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பாதுகாப்பை அதிகரிக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது. தமிழகத்தில் கோவில்கள், மசூதிகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ், துணை காவல் படையினர் எல்லோரும் பாதுகாப்பு பணியில் இறங்கி உள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments