தமிழகத்துக்கு ஒவ்வொரு முறை பிரதமர் மோடி வரும்போதும் #GoBackModi என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வது வழக்கம்.
இம்முறை சீன அதிபர் சென்னை வந்துள்ள நிலையில், #GoBackModi என்ற ஹேஷ்டேக் சீன மொழியில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தில் உள்ளார்.
சீன அதிபர் இரண்டு நாட்கள் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ட்விட்டரில் சீன அதிபரை வரவேற்ற தமிழக ட்விட்டர்வாசிகள் மோடிக்கு எதிராக சீன மொழியிலேயே ட்விட்டர் அளவில் உலக ட்ரெண்ட் செய்துள்ளனர்.
இன்று காலை #GoBackModi ஹேஷ்டேக் இந்திய ட்ரெண்ட் அளவில் முதலிடத்தில் இருந்தது. உலக அளவில் தற்போது #GoBackModi என்ற சீன ஹேஷ்டேக் #回到莫迪 ட்ரெண்ட் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முழக்கத்தை பாகிஸ்தான் அடிப்படையிலானவர்கள் பரப்பி வருவதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. தமிழர்களைவிட பாகிஸ்தானைச் சார்ந்தோர் #GoBackModi ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய அதிகப்படியாக உபயோகப்படுத்தியுள்ளனர். இன்னும் சில பாகிஸ்தான் அபிமானிகள் #GoBackModi ஹேஷ்டேகுக்கு பின்புலமாக உள்ள இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
Comments