திமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதி

soon, DMK starts Young Women Council சென்னை: திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுகவில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் பதவி ஏற்ற பின்னர், அந்த அமைப்பிற்கு பொதுமக்களை அதிக அளவில் சேர்க்கும் பணி முடக்கி விட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணிக்கு புதியநிர்வாகிகளை நியமிக்கும் பணியிலும் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

18 வயது தாண்டிய முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் திமுகவின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உதயநிதி இந்த பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற அமைப்பு புதிதாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் இளம் பெண்கள் பேரவை செயல்படும் என்றும், இம்மாத இறுதியில் அது தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முற்போக்கு சிந்தனையுடன் களத்தில் பணியாற்றக்கூடிய இளம் பெண்கள் 7 பேரை மாநில துணை செயலாளர்களாக தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Comments