மோடி- ஜின் பிங் பேசிக் கொண்டிருந்த போது திடீரென குறுக்கே வந்த நாய்.. அதிகாரிகள் அதிர்ச்சி - வீடியோ

மாமல்லபுரம்: பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் பேசிக் கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்ளோ பாதுகாப்பையும் மீறி ஒரு உடனே போனதை கண்டு அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்து மாமல்லபுரத்தில் பேசி வருகிறார்.


முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று உணவு அருந்தி ஓய்வெடுத்தார். அதன்பின்னர் மாலை 4 மணி அளவில் கார் மூலம் மாமல்லபுரம் சென்றார். மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு சென்றடைந்த சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார். பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்து சீன அதிபரை வரவேற்றார். அப்படியே இருவரும் நடந்தபடி பேசிக் கொண்டு சென்றனர். பிரதமர் மோடி ஒவ்வாரு இடத்தின் பெருமைகளையும் சீன அதிபர் ஜின்பிங்குக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். பிரதமர் மோடியும் சீன அதிபரும் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென நாய் ஊடே புகுந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி நாய் அங்கு வந்திருக்கிறது. அந்த நாயை உடனே விரட்ட முடியாமல் அதிகாரிகள் அவதி அடைந்தனர். எனினும் சிறிது நேர போராட்டத்திற்கு பின் நாய் அங்கிருந்து விரட்டப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments